அமெரிக்காவில் குழந்தைக்கு விஷப் பால் கொடுத்த தாயின் கொடுஞ் செயல்
.jpg)
14 ஆடி 2023 வெள்ளி 08:05 | பார்வைகள் : 16770
அமெரிக்காவில் நசாவ் மாகாணத்தைச் சேர்ந்த 17 வயதான சிறுமிக்கு 9 மாத ஆண் குழந்தை இருந்துள்ளது.
கடந்த மாதம் 26ஆம் திகதி அந்த குழந்தை மர்மமான முறையில் உயிரிழந்தமை தெரியவந்துள்ளது.
அதன் பின் பொலிஸார் குழந்தை இறந்தது தொடர்பில் விசாரணைகளை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் குழந்தை அருந்திய பாலுடன் ஃபெண்ட்டானில் எனப்படும் மயக்க மருந்து அதிகளவு கலந்திருந்தது பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
அறுவை சிகிச்சைக்குப் பிறகு வலி நிவாரணியாகக் கொடுக்கப்படும் ஃபெண்ட்டானில் மருந்தை அதிகளவு எடுத்துக் கொண்டால் உயிரிழக்க நேரிடும் எனக் கூறப்படுகிறது.
அப்படி சுமார் 10 பேரை கொல்லக்கூடிய அளவுக்கான ஃபெண்டானிலை பாலுடன் கலந்து குழந்தைக்குக் கொடுத்திருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவத்தன்று தாம் சோர்வாக இருந்ததாகவும் தூங்கலாம் என்று நினைத்தபோது குழந்தை அழுதுகொண்டே இருந்ததாகவும் குழந்தையின் தாய் கூறியுள்ளார்.
குழந்தையை தூங்க வைக்க எண்ணிய அவர், போதைப் பொருளான கொக்கைன் என நினைத்து, ஃபெண்ட்டானிலை பாலுடன் கலந்து கொடுத்தது தெரியவந்தது.
இவ்வாறு 9 மாத குழந்தைக்கு அளவுக்கதிகமான மயக்க மருந்தை பாலில் கலந்து கொடுத்து கொலை செய்ததாக தாய் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025