கனடாவின் தலைநகரை புரட்டி போட்ட சூறாவளி..
14 ஆடி 2023 வெள்ளி 08:17 | பார்வைகள் : 7759
கனடாவின் தலைநகரமான ஒட்டாவாவின் சில பகுதிகளை சூறாவளி தாக்கியுள்ளது.
இந்த சூறாவளி தாக்குதலினால் உயிர் சேதங்கள் எதுவும் பதிவாகவில்லை.
கனடியா சுற்றாடல் திணைக்களம் சூறாவளிக்காற்று தொடர்பில் தகவல்களை வெளியிட்டுள்ளது. சூறாவளி காற்று தாக்கம் காரணமாக சுமார் 125 வீடுகள் சேதமடைந்துள்ளன.
சூறாவளி தாக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகளை மதிப்பீடு செய்து வருவதாக அரசாங்க அதிகாரிகள் தெரிவித்து வருவதுடன் மரங்கள் முறிந்து வீழ்ந்தமை, ஜன்னல்கள் உடைந்தமை, கூரைகள் சேதமாகியமை ஆகியவையே பிரதானமான சேதங்கள் என தெரிவிக்கப்படுகிறது.
ஒட்டவா மட்டுமன்றி கியூபிக் மாகாணத்திலும் சூறாவளி தாக்கம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதனால் மக்கள் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.