Paristamil Navigation Paristamil advert login

விருப்ப பட்டியல் எதையும் காங்கிரஸ் வழங்கவில்லை - டி.ஆர்.பாலு பேட்டி

விருப்ப பட்டியல் எதையும் காங்கிரஸ் வழங்கவில்லை - டி.ஆர்.பாலு பேட்டி

28 தை 2024 ஞாயிறு 11:44 | பார்வைகள் : 2406


சென்னை அண்ணா அறிவாலயத்தில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக, காங்கிரஸ் இடையேயான முதற்கட்ட பேச்சுவார்த்தை நிறைவடைந்தது. 

தொகுதி உடன்பாடு பேச்சுவார்த்தைக்குப் பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய திமுக பொருளாளரும், தொகுதிப் பங்கீடு குழு தலைவருமான டி.ஆர்.பாலு , "மக்களவை தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து திமுக- காங்கிரஸ் இடையேயான முதற்கட்ட பேச்சுவார்த்தை முடிந்தது. விருப்ப பட்டியல் எதையும் காங்கிரஸ் கொடுக்கவும் இல்லை. திமுக கேட்கவும் இல்லை. 

நாடாளுமன்ற தேர்தலில் இளைஞர்களுக்கு உதயநிதி வாய்ப்பு கேட்டதில் தவறில்லை. உதயநிதி கேட்டதுபோல் இளைஞர்களுக்கான வாய்ப்பு குறித்து முதல்-அமைச்சரிடம் தெரிவிப்பேன். 20க்கும் மேற்பட்ட தொகுதிகளில் திமுக நிற்கவேண்டும் என்று நான் விரும்புகிறேன். 

இந்தியா கூட்டணியில் இருந்து நிதிஷ்குமார் விலகியதால் எந்தவித பின்னடைவும் ஏற்படவில்லை. இந்தியா கூட்டணியின் வளர்ச்சிக்காக நிதிஷ்குமார் கூறிய திட்டங்கள் எதுவும் இல்லை. இந்தி பேச வேண்டும் என்ற ஒன்றை மட்டுமே நிதிஷ் குமார் முன்னிறுத்தினார். நிதிஷ்குமார் பல தடைகள் ஏற்படுத்தியும் கூட்டணியில் இருப்பதால் அமைதியாக இருந்தோம். பிரதமர் வேட்பாளராக வர வேண்டும் என நிதிஷ்குமார் தெரிவிக்கவில்லை. ஆரம்பத்தில் இருந்தே நிதிஷ் குமார் பிரச்சினைதான்" என்று அவர் கூறினார். 

மக்கள் நீதி மய்யம் கட்சி கூட்டணியில் இணைய உள்ளதா என்ற கேள்விக்கு பதிலளித்த டி.ஆர்.பாலு, "தெரியவில்லை" என்றார். 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்