Paristamil Navigation Paristamil advert login

Scooterஆக மாறும் Auto Rikshaw... - 2-In-1 மின்சார வாகனத்தை அறிமுகம் செய்த Hero நிறுவனம்

Scooterஆக மாறும் Auto Rikshaw... - 2-In-1 மின்சார வாகனத்தை அறிமுகம் செய்த Hero நிறுவனம்

28 தை 2024 ஞாயிறு 13:21 | பார்வைகள் : 1372


Hero நிறுவனம் புதுவிதமான Two-in-One எலக்ட்ரிக் வாகனத்தை அறிமுகம் செய்துள்ளது.

புதுமையான வாகனங்களை அறிமுகம் செய்வதில் எப்போதும் முன்னணியில் இருக்கும் முன்னணி இருசக்கர வாகன நிறுவனமான Hero, Two-in-One எலக்ட்ரிக் வாகனத்தை அறிமுகம் செய்துள்ளது.

Hero MotoCorp-இன் ஸ்டார்ட்அப் நிறுவனமான Surge, தேவைக்கேற்ப இரு சக்கரமாகவும் மூன்று சக்கர வாகனமாகவும் மாற்றி அமைத்துக் கொள்ளக்கூடிய Two-in-One Electric வாகனத்தை சந்தைக்கு கொண்டு வந்துள்ளது.

சமீபத்தில் நடைபெற்ற Hero World 2024 நிகழ்விலும் இந்த வாகனம் காட்சிப்படுத்தப்பட்டது.

Surge S32 என அழைக்கப்படும் இந்த முச்சக்கர வாகனத்தை வெறும் 3 நிமிடங்களில் இரு சக்கர வாகனமாக மாற்றி அமைக்க முடியும்.

வணிகத் தேவைக்காக மூன்று சக்கர வாகனமாகவும், தனிப்பட்ட தேவைகளுக்காக இரு சக்கர வாகனமாகவும் மாற்றலாம்.

இந்த வாகனம் இரண்டு விதமான திறன்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

11 கிலோவாட் மின்கலத்துடன் கூடிய முச்சக்கர வண்டியானது 50 கிலோமீற்றர் வேகம் கொண்டது மற்றும் 500 கிலோ எடையுள்ள சரக்குகளை சுமந்து செல்லக்கூடியது.

3 கிலோவாட் பேட்டரி மூலம் இயங்கும் இரு சக்கர வாகனம் அதிகபட்சமாக மணிக்கு 60 கிமீ வேகத்தில் செல்லும்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்