Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் புதிய வரி தொடர்பில் வெளியான தகவல்!

இலங்கையில் புதிய வரி தொடர்பில் வெளியான தகவல்!

29 தை 2024 திங்கள் 14:11 | பார்வைகள் : 4554


எதிர்காலத்தில் மறைமுக வரிகளை அறிமுகப்படுத்தவோ அல்லது வரி சதவீதத்தை அதிகரிக்கவோ அரசாங்கத்துக்கு எண்ணம் இல்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.

எனவே, மறைமுக வரி விதிப்பால் பொருட்களின் விலை உயராது என்றும், பொருட்களின் தேவை மற்றும் விநியோகத்தின் அடிப்படையில் பொருட்களின் விலை நிர்ணயிக்கப்படும் என்றும் நிதி இராஜாங்க அமைச்சர் கூறினார்.

இதேவேளை, 2025ஆம் ஆண்டு புதிய சொத்து வரி அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

சொத்து வரி என்பது நேரடி வரி என்றும், அதிக சொத்து வைத்திருப்பவர்களிடம் இந்த வரி வசூலிக்கப்படும் என அவர் சுட்டிக்காட்டினார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்