இலங்கை நோக்கி படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்

30 தை 2024 செவ்வாய் 17:04 | பார்வைகள் : 5722
ஆண்டின் முதல் 28 நாட்களில் நாட்டுக்கு 189,574 சுற்றுலாப் பயணிகள் வருகைத் தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி கடந்த 15ஆம் திகதி மாத்திரம் 8,541 சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வந்ததாக தரவுகள் தெரிவிக்கின்றன.
அதேநேரம் ஆண்டின் முதல் 28 நாட்களில் இந்தியாவிலிருந்தே அதிக சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர்.
இதன்படி, குறித்த காலப்பகுதியில் இந்தியாவில் இருந்து 31,920 சுற்றுலா பயணிகளும், ரஷ்யாவில் இருந்து 28,159 சுற்றுலா பயணிகளும், பிரித்தானியாவில் இருந்து 15,252 சுற்றுலா பயணிகளும் இலங்கைக்கு வந்துள்ளனர்.