இலங்கையில் எரிபொருட்களின் விலை அதிகரிப்பு
1 மாசி 2024 வியாழன் 02:55 | பார்வைகள் : 2107
நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் இலங்கை கனிய வள கூட்டுத்தாபனத்தின் எரிபொருட்களின் விலை திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
இதன்படி ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 5 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதன்படி அதன் புதிய விலை 371 ரூபாயாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 8 ரூபாயினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 456 ரூபாயாகும்.
இதேவேளை ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை, 5 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 363 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 7 ரூபாயினால் குறைக்கப்பட்டுள்ளது.
இதன்படி சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 468 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 26 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 262 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, சிபெட்கோவின் புதிய விலைக்கு ஏற்பலங்கா ஐஓசி நிறுவனமும் எரிபொருட்களின் விலையை அதிகரிக்க தீர்மானித்துள்ளது.