அமெரிக்காவில் டிக்டொக் செயலிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பெற்றோர்கள்
1 மாசி 2024 வியாழன் 16:28 | பார்வைகள் : 2817
தற்போதைய காலக்கட்டத்தில் டிக்டொக் செயலியை பயன்படுத்துவதில் மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்நிலையில் அமெரிக்காவில் 5,000 பெற்றோர் இணைந்து பிரபல சமூக ஊடகமான டிக்டொக்கிற்கு (Tik Tok)எதிராக நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
டிக்டொக் செயலியானது இளம் சமூகத்தினரை அழித்து வருவதாகக் குற்றம் சுமத்திய குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இவ்வழக்கானது அமெரிக்க மக்கள் மத்தியில் பெரும் பேசுபொருளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.