ஐரோப்பிய நாடொன்றில் இருந்து இலங்கை சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கதி

14 ஆடி 2023 வெள்ளி 09:51 | பார்வைகள் : 10038
கடுகண்ணாவ அலகல்ல மலையில் நடைபயணம் மேற்கொண்டபோது காணாமல்போன 32 வயதுடைய டென்மார்க்கை சேர்ந்த பெண்ணின் சடலம் பொலிஸாரால் இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பொலிஸாரும், விசேட அதிரடிப்படையினரும் நேற்று முதல் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையையின்போதே அவரது சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பெண் மலையில் நடைபயணம் மேற்கொண்டபோது தவறி வீழ்ந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.