Paristamil Navigation Paristamil advert login

ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் அரசியலுக்கு வரலாம்...எது குடும்ப அரசியல்? பிரதமர் மோடி விளக்கம்

ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் அரசியலுக்கு வரலாம்...எது குடும்ப அரசியல்? பிரதமர் மோடி  விளக்கம்

6 மாசி 2024 செவ்வாய் 01:08 | பார்வைகள் : 1380


நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31-ஆம் தேதி ஜனாதிபதி திரவுபதி  முர்முவின் உரையுடன் தொடங்கியது. கடந்த 1-ஆம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார் . இந்த நிலையில், இன்று ஜனாதிபதி  குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்துக்கு பதிலளித்து பிரதமர் மோடி இன்று உரையாற்றினார்.

அப்போது எதிர்க்கட்சிகளை கடுமையாக விமர்சித்தார். குறிப்பாக எது குடும்ப அரசியல் என்பது குறித்து பிரதமர் மோடி பேசினார். பிரதமர் மோடி கூறுகையில்,  ஒரே குடும்பத்தை சேர்ந்தோர் அரசியலுக்கு வரலாம். ஆனால், ஒரே குடும்பம் கட்சி நடத்துவதுதான் குடும்ப அரசியல்.   ஒரு முகத்தை முன்னிலைப்படுத்த மீண்டும், மீண்டும், முயற்சிப்பதால் இழுத்து மூடும் நிலையில் காங்கிரஸ் கட்சி  உள்ளது" என்றார். 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்