சிரியாவில் அமெரிக்க படைத்தளம் மீது ட்ரோன் தாக்குதல்
6 மாசி 2024 செவ்வாய் 10:19 | பார்வைகள் : 3429
சிரியாவில் உள்ள மிகப்பெரிய அமெரிக்க இராணுவ தளத்தின் மீது ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
அதில் குறைந்தது ஆறு குர்திஷ் தலைமையிலான போராளிகள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிரிய ஜனநாயகப் படைகள் (SDF) கிழக்கு மாகாணமான Deir al-Zour இல் அல்-ஒமர் எண்ணெய் வயலில் உள்ள அதன் கொமாண்டோ அக்கடமி திங்கள்கிழமை அதிகாலையில் தாக்கப்பட்டதாகக் கூறியது.
சிரிய அரசாங்கப் படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் இருந்து ஈரான் ஆதரவு போராளிகள் ட்ரோனை ஏவுவதாக சிரிய ஜனநாயகப் படைகள் குற்றம் சாட்டியுள்ளன.
ஈரான் ஆதரவு போராளி குழு ஒன்று இந்த தாக்குதலுக்கு உரிமை கோரியுள்ளது.
இந்த தாக்குதல் தொடர்பாக அமெரிக்க இராணுவத்திடம் இருந்து எந்தக் கருத்தும் அல்லது உயிரிழப்புகள் பற்றிய எந்த அறிக்கையும் வெளிவரவில்லை
ஜோர்டானில் உள்ள தளத்தின் மீது நடத்தப்பட்ட ஆளில்லா விமானத் தாக்குதலுக்குப் பதிலடியாக வார இறுதியில் ஈராக் மற்றும் சிரியாவில் ஈரான் ஆதரவு குழுக்களுக்கு எதிராக அமெரிக்கா தாக்குதல்களை நடத்தியதில் இருந்து இது இரண்டாவது சம்பவம் ஆகும்.