ஹவுதியின் திடீர் தாக்குதல் - ஏடன் வளைகுடாவில் சிதறிய லைபீரியா கப்பல்!

8 பங்குனி 2024 வெள்ளி 08:23 | பார்வைகள் : 8202
ஏடன் வளைகுடாவில் பயணித்த கப்பல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளார்கள்.
மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
நான்கு பேர் காயமடைந்துள்ளனர்.
புதன்கிழமை ஏடன் வளைகுடா(Gulf Of Aden) பகுதியில் சென்ற பெரிய சரக்கு கப்பல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் படை திடீர் ஏவுகணை(Houthi Missile Hits) தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதலில் பார்படாஸ்-கொடியுடன், லைபீரியாவுக்குச்(Liberian) சொந்தமான "M/V True Confidence" என்ற கப்பல் தாக்கப்பட்டது.
தாக்குதலுக்குப் பிறகு, கப்பலின் ஊழியர்கள் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாகவும், குறைந்தது நால்வர் காயமடைந்துள்ளதாகவும், மூன்று பேர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகவும், கப்பலுக்கு கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் CENTCOM தெரிவித்துள்ளது.
கப்பலின் ஊழியர்கள் கப்பலை விட்டு வெளியேறினர்.
இச்சம்பவம் குறித்து கூட்டணி போர்க்கப்பல்கள் ஆய்வு செய்து வருகின்றன.
மேலும், இது இரண்டு நாட்களில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள்(Yemen's Houthi rebels) ஐந்தாவது முறையாக கப்பல் தடுப்பு ஏவுகணையை ஏவியுள்ளதாக CENTCOM குறிப்பிட்டுள்ளது.
இந்த தாக்குதல், அடேன் வளைகுடா மற்றும் செங்கடல் வழியாக செல்லும் கப்பல் போக்குவரத்தை பாதிக்கும் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில மாதங்களாக, இந்த முக்கிய கடல் வழித்தடங்களில் இயக்கம் செய்யும் வணிக கப்பல்களை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025