Paristamil Navigation Paristamil advert login

நேட்டோவில் உத்தியோகபூர்வமாக இணையும் சுவீடன்

நேட்டோவில் உத்தியோகபூர்வமாக இணையும் சுவீடன்

8 பங்குனி 2024 வெள்ளி 08:28 | பார்வைகள் : 7435


நேட்டோ அமைப்பில் சுவீடன் 07-03-2024 உத்தியோகபூர்வமாக இணைந்து  கொண்டது. 

நேட்டோவின் 32 ஆவது அங்கத்துவ நாடு சுவீடன் ஆகும். 

நீண்டகாலம் அணிசேரா நாடாக விளங்கிய சுவீடன், உக்ரேன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பின் பின்னர், நேட்டோவில் இணைவதற்கு விண்ணப்பித்தது. 

நேட்டோவில் சுவீடன் இணைவதற்கான சம்மதத்தை தெரிவிப்பதற்கு துருக்கியும் ஹங்கேரியும் தயங்கிவந்தன. 

பின்னர் இவ்விரு நாடுகளும் தமது சம்மத்தை தெரிவித்த நிலையில், நேட்டோவில் சுவீடன் இணைந்துகொண்டது.

நேட்Nhவில்  சுவீடன் இணைந்ததை வரவேற்றுள்ள சுவீடன் பிரதமர் ஊல்வ் கிறிஸ்டேர்சன், இது சுதந்திரத்துக்கான ஒரு வெற்றி என கூறியுள்ளார்.  
 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்