Paristamil Navigation Paristamil advert login

மாரி செல்வராஜ் இயக்கத்தில் கார்த்தி?

மாரி செல்வராஜ் இயக்கத்தில் கார்த்தி?

9 பங்குனி 2024 சனி 03:32 | பார்வைகள் : 2261


மாமன்னன் படத்திற்கு பின் வாழை என்கிற படத்தை இயக்கி உள்ளார் மாரி செல்வராஜ். அடுத்து துருவ் விக்ரமை வைத்து புதிய படம் ஒன்றைக் இயக்கவுள்ளார். கபடி விளையாட்டை மையமாக வைத்து உருவாகும் இதில் கபடி வீரராக துருவ் நடிக்கிறார். இதுதவிர ஏற்கனவே மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் புதிய படம் ஒன்றில் நடிப்பதாக அறிவித்தனர்.

இந்நிலையில் நேற்றைய தினம் மாரி செல்வராஜ் பிறந்தநாளை முன்னிட்டு பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் புதிய போஸ்டர் ஒன்று வெளியிடப்பட்டது. இதனால் இந்த தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் மாரி செல்வராஜ் படம் இயக்குவது உறுதியானது. ஆனால் ஹீரோ யார் என்பது குறித்து அறிவிக்கப்படவில்லை.

இந்நிலையில்  இப்படத்தில் கார்த்தி நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மாரி செல்வராஜ் தற்போது துருவ் விக்ரம் நடிப்பில் படம் ஒன்றை இயக்கவுள்ளார். இதற்கான முன் தயாரிப்பு பணிகள் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. விரைவிலே படப்பிடிப்பும் துவங்கவுள்ளது. இதனையடுத்து கார்த்தி - மாரி செல்வராஜ் இணையும் படம் துவங்கும் என கூறப்படுகிறது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்