Paristamil Navigation Paristamil advert login

கமல் -ஷங்கர் கூட்டணியில் உருவாகும் அதிரடி பாடல்.

கமல் -ஷங்கர் கூட்டணியில் உருவாகும் அதிரடி பாடல்.

9 பங்குனி 2024 சனி 03:44 | பார்வைகள் : 2031


கமல்ஹாசன் தற்போது ஷங்கரின் இயக்கத்தில் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தில் கமலுடன் இணைந்து சித்தார்த், பாபி சிம்பா என பலர் நடித்து வருகின்றனர். 1996 ஆம் ஆண்டு ஷங்கரின் இயக்கத்தில் கமலின் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் இந்தியன். ஏ.ஆர் ரஹ்மான் இசையில் மிகப்பிரமாண்டமாக வெளியான இப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

இதைத்தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக கடந்த 2017 ஆம் ஆண்டு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதன் பிறகு 2018 ஆம் ஆண்டு இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து 2020 ஆம் ஆண்டு இப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் விபத்து ஏற்பட்டது. அதன் பிறகு கொரோனா ஊரடங்கு, தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் இடையே கருத்து வேறுபாடு என பல பிரச்சனைகளின் காரணமாக இப்படம் கிடப்பில் போடப்பட்டது.

இந்நிலையில் ஒருபக்கம் கமல் அரசியலில் களமிறங்கினார் மறுபக்கம் ஷங்கர் ராம் சாரணை வைத்து RC15 திரைப்படத்தை இயக்க சென்றுவிட்டார். எனவே இந்தியன் 2 திரைப்படம் கைவிடப்பட்டதாகவே பலர் நினைத்தனர். இதையடுத்து விக்ரம் படத்தின் வெற்றியினை தொடர்ந்து மீண்டும் இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பை துவங்கினார் கமல். தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.

பெரும்பாலான படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் மீதமுள்ள படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் இந்தியன் 2 திரைப்படத்தில் ஒரு பாடல் காட்சி படமாக்கப்பட இருக்கின்றது. கமலை வைத்து செம மாஸான ஒரு பாடலாக இப்பாடலை படமாக்க இருக்கின்றார் ஷங்கர். கிட்டத்தட்ட 30 கோடி செலவில் இப்பாடலை ஷங்கர் உருவாக்க திட்டமிட்டுள்ளார்.

இந்திய திரையுலகிலேயே அதிக பட்ஜெட்டில் உருவாகும் பாடலாக இது இருக்குமாம். ஆனால் ஒரு பாடலுக்கு 30 கோடி செலவு செய்வார்களா என தெரியவில்லை. இருந்தாலும் இப்பாடல் மிகப்பெரிய பொருட்ச்செலவில் உருவாக இருப்பதாகவே தெரிகின்றது.இந்த தகவலை கேள்விப்பட்ட ரசிகர்கள் இந்த செலவிற்கு இரண்டு படங்களை எடுத்துவிடலாம் போலயே என பேசி வருகின்றனர்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்