100-வது டெஸ்டில் அஷ்வின் படைத்த மோசமான சாதனை., கிரிக்கெட் வரலாற்றில் 9-வது வீரர்
9 பங்குனி 2024 சனி 08:12 | பார்வைகள் : 2029
சர்வதேச கேரியரில் 100வது டெஸ்ட் என்பது யாருக்கும் சிறப்பு வாய்ந்தது.
எந்தவொரு கிரிக்கெட் வீரரும் இந்தப் போட்டியில் தங்கள் ஆட்டம் தனித்து நிற்க வேண்டும் என்று விரும்புவார்கள்.
ஆனால் இந்தியாவின் மூத்த சுழல் ஜாம்பவான் ரவிச்சந்திரன் அஷ்வின் 100வது டெஸ்டில் துடுப்பாடும் போது மோசமான சாதனையை படைத்துள்ளார்.
தரம்சாலா மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியின் ஒரு பகுதியாக முதல் இன்னிங்சில் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்திய அஷ்வின், துடுப்பாடும் போது டக் அவுட் ஆனார். எனவே ஒரு மோசமான சாதனை அவருக்கு கிடைத்துள்ளது.
இந்தியாவின் முதல் இன்னிங்ஸின் ஒரு பகுதியாக, இரண்டாவது நாள் ஆட்டத்தில் அஷ்வின் ஐந்து பந்துகளில் ஒரு ஓட்டம் கூட எடுக்காமல் பெவிலியன் அடைந்தார்.
டாம் ஹர்ட்லி பந்தில் அஸ்வின் கிளீன் போல்டு ஆனார்.
100வது டெஸ்டில் டக் ஆன இந்தியாவின் மூன்றாவது வீரர் மற்றும் சர்வதேச அளவில் 9வது வீரர் என்ற தேவையில்லாத சாதனையை அஸ்வின் பெற்றுள்ளார்.
சர்வதேச அளவில் 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய போது ஒரு ஓட்டம் கூட எடுக்காமல் வெளியேறியவர்களில் இந்தியாவைச் சேர்ந்த திலிப் வெங்சர்கார் மற்றும் சத்தேஷ்வர் புஜாரா ஆகியோர் அடங்குவர். அஸ்வின் இப்போது அந்தப் பட்டியலில் இணைந்துள்ளார்.
100வது டெஸ்டில் டக் டக் ஆன வீரர்கள்..
1- திலீப் வெங்சர்க்கார் (Dilip Vengsarkar) இந்தியா: 1988ல் மும்பை வான்கடே மைதானத்தில் நியூசிலாந்துக்கு எதிரான போட்டி.
2- ஆலன் பார்டர் (Allan Border) அவுஸ்திரேலியா: 1991ல் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான போட்டி.
3- கோட்னி வால்ஷ் (Courtney Walsh) மேற்கிந்திய தீவுகள்: இங்கிலாந்துக்கு எதிரான போட்டி.
4- மார்க் டெய்லர் (Mark Taylor) அவுஸ்திரேலியா: 1998ல், இங்கிலாந்துக்கு எதிரான கபா மைதானத்தில் நடந்த போட்டி.
5- ஸ்டீபன் பிளெமிங் (Mark Taylor) நியூசிலாந்து: 2006ல் செஞ்சூரியனில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டி.
6- பிரண்டன் மெக்கல்லம் (Brendon McCullum) நியூசிலாந்து: 2016ல் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக வெலிங்டனில் நடந்த டெஸ்ட்.
7- அலஸ்டர் குக் (Alastair Cook) இங்கிலாந்து: 100வது டெஸ்டில் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் குக்கும் டக் அவுட் ஆனார்.
8-சட்டேஷ்வர் புஜாரா (Cheteshwar Pujara) இந்தியா:கடந்த ஆண்டு டெல்லியில் ஆஸி.க்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டிராபி போட்டி.
இந்த பட்டியலில் அஸ்வின் சமீபத்தில் இணைந்துள்ளார்.