காசாவில் அமெரிக்க பாரசூட் திறக்காததால் அவலம்! 5 பேர் பலி
9 பங்குனி 2024 சனி 08:48 | பார்வைகள் : 4374
இஸ்ரேல் - ஹமாஸ் போர் இன்னும் முடிவுக்கு வராத நிலையில், காசாவில் பெரும் உணவுதட்டுப்பாடு நிலவி வருகின்றது.
இந்நிலையில் அமெரிக்கா காசா மக்களுக்கு விமானத்தில் இருந்து நிவாரண பொருட்கள் பாரசூட் மூலம் வீசி வருகின்றது.
இந்நிலையில் நிவாரண பொருட்கள் பாரசூட் திறக்காததால் பொதுமக்கள் மீது விழுந்த சம்பவத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.
இஸ்ரேல் மீது காசாவில் செயல்பட்டுவரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7 இல் பயங்கரவாத தாக்குதல் நடத்தியதில் இஸ்ரேலில் 1,139 பேர் கொல்லப்பட்டனர்.
அதோடு நின்றுவிடாது தாக்குதல் நடத்திய ஹமாஸ் ஆயுதக்குழுவினர் இஸ்ரேலியர்கள் 253 பேரை காசாமுனைக்கு பணய கைதிகளாக கடத்தி சென்றனர். இந்த தாக்குதலை தொடர்ந்து காசாவில் உள்ள ஹமாஸ் ஆயுதக்குழுவினர் மீது இஸ்ரேல் போர் அறிவித்தது.
ஹமாஸ் ஆயுதக்குழுவின் தாக்குதலுக்கு பதிலடியாக காசாமுனை மீது போர் அறிவித்துள்ள இஸ்ரேல் அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறது.
இஸ்ரேல் நடத்திவரும் இந்த தாக்குதலில் காசா முனையில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் உள்பட 30 ஆயிரத்து 800 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேற்குகரையில் நடந்த மோதலில் 424 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் போரை நிறுத்தும்படி உலகநாடுகள் இறேலிடம் வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.