தான்சானியாவில் ஆமைக்கறி சாப்பிட்ட 8 குழந்தைகள் பலி
9 பங்குனி 2024 சனி 10:47 | பார்வைகள் : 4003
தான்சானியா நாட்டின் பெம்பா தீவில் ஆமை கறி சாப்பிட்ட 8 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றமை அதிர்ச்சியை ஏற்படுத்திட்யுள்ளது.
இதுபற்றி மாவட்ட மருத்துவ அதிகாரி ஹாஜி பகாரி ஹாஜி கூறுகையில்,
உயிரிழந்தவர்கள் அனைவரும் கடல் ஆமை கறியை வாங்கி சாப்பிட்டு உள்ளனர் என மருத்துவ ஆய்வக பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கின்றன.
கடந்த செவ்வாய் கிழமை 05-03-2024 இந்த சம்பவம் நடந்தபோதும், திட்டு விழும் என்ற பயத்தில் இதுபற்றி அதிகாரிகளிடம் தெரிவிக்கப்படவில்லை.
சம்பவத்தில், முதியவர்களில் 78 பேர் உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
அதேசமயம் கடந்த 2023-ம் ஆண்டு மார்ச்சில் இதேபோன்றதொரு சம்பவம் நடந்தது.
தான்சானியாவின் இந்திய பெருங்கடல் பகுதியில் அமைந்த மாபியா தீவில் வேணி கிராம பகுதியில், கடல் ஆமை கறியை வாங்கி சாப்பிட்ட 7 பேர் உயிரிழந்தனர்.
8 பேர் உடல்நலம் பாதிக்கப்பட்டனர். சம்பவம் தொடர்பில் வேணி கிராமத்தின் தலைவர் ஜுமா கதிபு கூறுகையில்,
மீனவர்களிடம் இருந்து கடல் ஆமை கறியை வாங்கி அவர்கள் சாப்பிட்டு உள்ளனர். அது விஷம் நிறைந்தது என சந்தேகிக்கப்படுவ்தாகவும் அவர் தெரிவித்தார்.