தி.மு.க. கூட்டணியில் ம.நீ.ம. கட்சிக்கு இடம் ஒதுக்கீடு
9 பங்குனி 2024 சனி 11:56 | பார்வைகள் : 3063
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில் தமிழ்நாட்டில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ், பா.ஜ.க., பா.ம.க., தே.மு.தி.க., விடுதலை சிறுத்தைகள், அ.ம.மு.க., மக்கள் நீதி மய்யம் உள்பட பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதி பங்கீடு உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ஒரு மாநிலங்களவை தொகுதி. தொகுதி பங்கீடு தொடர்பான ஒப்பந்தம் தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் மற்றும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இடையே இன்று கையெழுத்தாகியுள்ளது.
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மாநிலங்களவை பதவிக்கான தேர்தலில் ம.நீ.ம. கட்சிக்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், வரும் மக்களவை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடப்போவதில்லை என்றும் தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவோம் என்றும் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.