தனுஷ் நடிக்கும் குபேரா திரைப்படத்தின் கதை இதுவா?

9 பங்குனி 2024 சனி 14:09 | பார்வைகள் : 6422
தனுஷின் நடிப்பில் சமீபத்தில் வெளியான கேப்டன் மில்லர் திரைப்படம் சுமாரான வெற்றியை பெற்றது. அருண் மாதீஸ்வரன் இயக்கத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்பிற்கு மத்தியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியானது கேப்டன் மில்லர். மிகப்பெரிய எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை தான் பெற்றது.
இருந்தாலும் வசூல் ரீதியாக கேப்டன் மில்லர் வெற்றிப்படமாக அமைந்தது. இதைத்தொடர்ந்து தன் அடுத்த திரைப்படத்தின் மூலம் விமர்சன ரீதியாகவும் வெற்றிபெற வேண்டும் என்ற முனைப்பில் ராயன் திரைப்படத்தை உருவாக்கி வருகின்றார் தனுஷ். இந்நிலையில் தனுஷின் ஐம்பதாவது திரைப்படமாக உருவாகி வரும் ராயன் திரைப்படத்தின் படப்பிடிப்பு எல்லாம் முடிவடைந்து தற்போது போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது
சமீபத்தில் தான் இப்படத்தின் போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகின்றது. இப்படத்தை தொடர்ந்து தனுஷ் தன் 51 ஆவது திரைப்படத்தில் பிசியாக நடித்து வருகின்றார். தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் இப்படத்தை சேகர் கம்முலா இயக்கி வருகின்றார். தனுஷுடன் இணைந்து இப்படத்தில் ரஷ்மிகா, நாகர்ஜுனா ஆகியோர் நடித்து வருகின்றனர்.
வாத்தி திரைப்படத்திற்கு பிறகு தெலுங்கிலும் தனுஷின் மார்க்கெட் அதிகரித்துள்ளதால் இப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகின்றது. இந்நிலையில் நேற்று இப்படத்தின் டைட்டில் கிலிம்ப்ஸ் வீடியோ வெளியானது. தனுஷின் 51 ஆவது திரைப்படத்திற்கு குபேரா என பெயர் வைத்திருக்கின்றனர். இதைத்தொடர்ந்து இப்படத்தின் ஒருவரி கதை பற்றி ஒரு தகவல் கிடைத்திருக்கின்றது.
குபேரா திரைப்படம் பணம் சம்மந்தப்பட்ட ஒரு கதையாம். பணத்தால் ஒருவரின் வாழ்க்கை எப்படி மாறுகின்றது என்பது தான் குபேரா திரைப்படத்தின் ஒருவரி கதை என ஒரு தகவல் கிடைத்துள்ளது. பணத்தால் ஏற்படும் மாற்றங்கள் பற்றி பேசும்படமாக குபேரா இருக்குமாம். இந்த தகவல் தான் தற்போது இணையத்தில் படு வைரலாகி வருகின்றது.
3 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1