Paristamil Navigation Paristamil advert login

பரிஸ் : RATP சாரதி கைது!

பரிஸ் :  RATP சாரதி கைது!

9 பங்குனி 2024 சனி 17:27 | பார்வைகள் : 8026


RATP சாரதி ஒருவர் நேற்று மார்ச் 8, வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டிருந்தார். வீடற்றவர் ஒருவரது கை முறிவுக்கு காரணமாக இருந்ததாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

பரிஸ் 7 ஆம் வட்டாரத்தில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை 6.40 மணி அளவில் வீடற்றவர் (SDF) ஒருவர் பேருந்துக்காக காத்திருந்தார். 42 ஆம் இலக்க பேருந்து அங்கு வருகை தந்த நிலையில், அதில் அவர் ஏற முற்பட்டார்.

அப்போது அவர் நிலை தடுமாறு கீழே விழுந்துள்ளார். அவரது கை ஒன்று பேருந்துக்குள் சிக்குண்டிருக்க, அதன் கதவுகளை மூடிவிட்டு, பேருந்தை இயக்கியுள்ளார்.

இதனால் அவர் பேருந்துக்குள் சிக்குண்டு காயமடைந்ததுடன், சில மீற்றர் தூரம் உருண்டு சென்றும் உள்ளார்.

சம்பவ இடத்துக்கு மீட்புக்குழு வருகை தந்து, அவரை எலும்பு முறிவுக்கு உள்ளான நிலையில் மீட்டனர். பேருந்து சாரதியினை காவல்துறையினர் கைது செய்தனர். விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்