மொனிக்கா புயல்! - ஐந்து பேரைக் காணவில்லை!!

10 பங்குனி 2024 ஞாயிறு 10:31 | பார்வைகள் : 11319
மொனிக்கா புயல் (Monica) காரணமாக தெற்கு பிரான்ஸ் கடும் சேதத்தினைச் சந்தித்துள்ளது. ஐந்து பேரைக் காணவில்லை என இன்று காலை தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரான்சின் தெற்கு மாவட்டமான Gard இல், நேற்று சனிக்கிழமை இரவு பலத்த புயல் வீசியது. மணிக்கு 130 கி.மீ வேகத்தில் சூறாவளி அடித்து வீசியது. Dions நகரில் மகிழுந்தில் பயணித்த தந்தை மற்றும் அவரது 13 மற்றும் 4 வயது பிள்ளைகளுடன் மகிழுந்து அடித்துச் செல்லப்பட்டது.
அதேவேளை, 47 மற்றும் 57 வயதுடைய மேலும் இருவரும் காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் ஸ்பெயினை நோக்கி பயணித்த வேளையில், மகிழுந்து புயலில் அடித்துச் செல்லப்பட்டது.
காணாமல் போனவர்கள் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025