Paristamil Navigation Paristamil advert login

ஒரே நாளில் ரஜினி - விஜய் படங்கள் திரைக்கு வருகிறதா?

ஒரே நாளில்  ரஜினி - விஜய் படங்கள் திரைக்கு வருகிறதா?

11 பங்குனி 2024 திங்கள் 05:06 | பார்வைகள் : 5727


தமிழ் சினிமாவில் சில ஆண்டுகளாகவே ரஜினி - விஜய் ரசிகர்களுக்கிடையே அடுத்த சூப்பர் ஸ்டார் விவகாரத்தில் சர்ச்சை எழுந்து வந்த நிலையில், ரஜினியின் ஜெயிலர் படம் ஹிட் அடித்ததை அடுத்து அந்த சர்ச்சை ஓய்ந்திருந்தது. அதையடுத்து லியோ படத்தின் சக்சஸ் மீட்டில் பேசிய விஜய், சூப்பர் ஸ்டார் என்றால் அது ஒருவர் தான். அவர் ரஜினிகாந்த் மட்டும்தான் என்று பேசி அந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

அதேபோல் லால் சலாம் படத்தின் ஆடியோ விழாவில், எனக்கு விஜய் போட்டி அல்ல என்று ரஜினிகாந்த்தும் ஒரு கருத்து சொன்னதை அடுத்து சோசியல் மீடியாவில் தொடர்ந்து மோதலில் ஈடுபட்டு வந்த ரஜினி - விஜய் ரசிகர்கள் அமைதி அடைந்தார்கள்.

இந்தநேரத்தில் தற்போது ரஜினி நடித்து வரும் வேட்டையன் படம் ஆகஸ்ட் 15ம் தேதி திரைக்கு வருவதாக ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது. அதோடு விஜய்யின் ‛கோட்' படமும் ஆகஸ்ட் 15ல் திரைக்கு வரப்போவதாக இன்னொரு செய்தியும் கோலிவுட்டில் வெளியாகி உள்ளது. இப்படி ஒரு செய்தி வெளியானதை அடுத்து மீண்டும் சோசியல் மீடியாவில் ரஜினி - விஜய் ரசிகர்களுக்கிடையே வார்த்தை மோதல் உருவாகி சலசலப்பு ஏற்படத் தொடங்கியிருக்கிறது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்