பா.ஜ., கூட்டணிக்கு வரிசையாக வரும் கட்சிகள்!
11 பங்குனி 2024 திங்கள் 08:17 | பார்வைகள் : 2701
கடந்த 2 வாரமாக அதிமுகவுடன் கூட்டணி குறித்து பேச்சு நடத்திவந்த விஜயகாந்த் துவக்கிய தே.மு.தி.க., பா.ஜ., கூட்டணியில் இணைய சாத்தியக்கூறு இருப்பதாக சென்னை அரசியல் வட்டாரம் தெரிவிக்கிறது. இது போல் மேலும் பல தமிழக அரசியல் கட்சிகள் பா.ஜ., கூட்டணியில் இணைய விருப்பமாக உள்ளதாக கூறப்படுகிறது.
தேமுதிக அதிமுக இடையில் தொகுதி ஒதுக்கீட்டில் திருப்திகரமான உடன்பாடு எட்டவில்லை. கட்சியின் தலைவர் பிரேமலதா அதிமுக மூத்த நிர்வாகிகள் நடத்திய பேச்சில் முன்னேற்றம் இல்லாததால் இன்று பா.ஜ.,வுடன் பேச்சு நடத்த இருப்பதாக தெரிகிறது.
தினகரன் , ஓபிஎஸ் வருவார்கள் !
பா.ஜ., கூட்டணியை பொறுத்தவரை தமிழ்மாநில காங்கிரஸ், சரத்குமாரின் சமத்துவமக்கள் கட்சி, ஜான்பாண்டியன் கட்சி இணைந்துள்ளது. ஓ.பி.எஸ்., தினகரன் கட்சியினரும் பா.ஜ.,வில் சேர ரகசிய பேச்சு நடத்தி வருகின்றனர். பாட்டாளி மக்கள் கட்சியினரும் சேர ஆர்வத்தில் உள்ளனர். இந்நிலையில் தேமுதிக சேரும் பட்சத்தில் பா.ஜ., கூட்டணி பலம் பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பா.ஜ.,வுடன் சுமூக பேச்சு நடந்து வருவதாகவும் கூட்டணி விரைவில் முடிவாகும் என்றும் முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ்., இன்று நிருபர்களிடம் தெரிவித்தார்.