Paristamil Navigation Paristamil advert login

டிக்-டொக்கை வீழ்த்தி இன்ஸ்டாகிராம் முதலிடம்

டிக்-டொக்கை வீழ்த்தி இன்ஸ்டாகிராம் முதலிடம்

11 பங்குனி 2024 திங்கள் 09:44 | பார்வைகள் : 5926


கடந்த ஆண்டு சர்வதேச ரீதியில் அதிகமான பயனர்கள் பதிவிறக்கம் செய்த செயலியாக இன்ஸ்டாகிராம் முதலிடம் பிடித்துள்ளது.

உலகளவில் பதிவிறக்கம் செய்யப்பட்ட செயலிகளில் டிக்-டொக்கை பின்தள்ளி இன்ஸ்டாகிராம் முதலிடத்தை பதிவுசெய்துள்ளது.

அதன்படி இன்ஸ்டாகிராம் பதிவிறக்கம் 2023இல் 20 சதவீதம் அதிகரித்துள்ளதோடு, மொத்தமாக 767 மில்லியன் முறை இந்த செயலி பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளதாக சென்சார் டவர் தகவல் வெளியிட்டுள்ளது.

இதன்மூலம், உலகிலேயே அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட செயலி என்ற பெருமையை 'இன்ஸ்டாகிராம்' பெற்றுள்ளது.

இதன்படி இன்ஸ்டாகிராம் செயலி 767 மில்லியன் முறை பதிவிறக்கம் செய்யப்பட்ட நிலையில், டிக்டொக் 733 மில்லியன் முறை பதிவிறக்கம் செய்யப்பட்டிருப்பதாக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இன்ஸ்டாகிராமின் இந்த அபார வளர்ச்சிக்கு அதன் ''ரீல்ஸ் அம்சம்'' முக்கிய காரணமாக உள்ளதாக தொழில்நுட்ப வல்லுநர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

மேலும், இன்ஸ்டாகிராம் கடந்த சில ஆண்டுகளாக டிக்டொக்கை மிஞ்சும் வகையில் அதிகமாக காணொளிகள் பதிவேற்றப்படுகின்றன.

அதன் ரீல்ஸ் அம்சம் இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது என்று சென்சார் டவரின் மூத்த நுண்ணறிவு அதிகாரி ஆபிரகாம் யூசெப் குறிப்பிட்டுள்ளார்.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்