பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்ட ஆசிரியருக்கு அஞ்சலி நிகழ்வு! - பிரதமர் நேரில் விஜயம்!

11 பங்குனி 2024 திங்கள் 10:25 | பார்வைகள் : 7273
பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்ட ஆசிரியர் Dominique Bernard இற்கு, இன்று மார்ச் 11, திங்கட்கிழமை தேசிய அஞ்சலி நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் பிரதமர் கேப்ரியல் அத்தால் பங்கேற்றுள்ளார்.
கடந்த 2023 ஆம் ஆண்டு ஒக்டோபர் 13 ஆம் திகதி Arras நகரில் உள்ள Gambetta-Carnot எனும் பாடசாலை வளாகத்தில் வைத்து Dominique Bernard எனும் ஆசிரியர் 20 வயதுடைய மாணவன் ஒருவரால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தார். மேலும் மூவர் காயமடைந்திருந்தனர்.
தாக்குதல் மேற்கொண்டது அதே பாடசாலையில் பயின்ற முன்னாள் மாணவன் ஆவார். அவர் தொடர்ந்தும் தாக்குதல்கள் மேற்கொள்ளாமல் இருக்க, அவர் மீது பாய்ந்து மடக்கிப்பிடித்து கைது செய்வதற்கு நால்வர் உதவியிருந்தனர்.
இந்நிலையில், இன்று கொல்லப்பட்ட ஆசிரியருக்கு அஞ்சலி நிகழ்வும், சாகசம் புரிந்த நால்வரும் கெளரவிக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.