ஆந்திராவில் இறுதியானது தொகுதி பங்கீடு
12 பங்குனி 2024 செவ்வாய் 00:46 | பார்வைகள் : 2754
அமராவதி, ஆந்திராவில், முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில், ஒய்.எஸ்.ஆர்.காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு, லோக்சபா தேர்தலுடன் சேர்த்து சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது.
ஆந்திராவில் மொத்தம், 175 சட்டசபை தொகுதிகள் உள்ளன. லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தலில், முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம், நடிகரும், ஜனசேனா தலைவருமான பவன் கல்யாண் மற்றும் பா.ஜ., ஆகியவை கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளன.
அதன்படி, மொத்தமுள்ள 25 லோக்சபா தொகுதிகளில், தெலுங்கு தேசம் 17; பா.ஜ., ஆறு மற்றும் ஜனசேனா இரண்டு தொகுதிகளில் போட்டியிட உள்ளன.
இதே போல், சட்டசபை தேர்தலில் மொத்தமுள்ள, 175 தொகுதிகளில், தெலுங்கு தேசம் 144; பா.ஜ., 10 மற்றும் ஜனசேனா 21 தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்துள்ளன.
இதற்கான அறிவிப்பை நேற்றிரவு தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு அதிகாரபூர்வமாக வெளியிட்டார்.