கனடாவில் வாடகை அதிகரிப்பு..! அதிர்ச்சியில் மக்கள்
12 பங்குனி 2024 செவ்வாய் 08:58 | பார்வைகள் : 3274
கனடாவில் வாடகைத் தொகை மேலும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த பெப்ரவரி மாதம் கனடாவில் சராசரி வாடகைத் தொகை 2193 டொலர்களாக பதிவாகியுள்ளது.
கடந்த 2023 ஆம் ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது இந்த வாடகைத் தொகையானது 10.5 சதவீத்தினால் அதிகரித்துள்ளது.
கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தின் பின்னர் வெகுவாக வாடகைத் தொகை அதிகரித்த மாதமாக கடந்த பெப்ரவரி மாதம் கருதப்படுகின்றது.
ஒரு படுக்கை அறையைக் கொண்ட வீடு ஒன்றின் வாடகைத் தொகை கடந்த பெப்ரவரி மாதம் 1920 டொலர்களாக காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இரண்டு ஆண்டு காலப் பகுதியில் கனடாவில் வாடகைத் தொகையானது 21 வீதம் அல்லது மாதாந்த வாடகைத் தொகை சராசரியாக 384 டொலர்களாக உயர்வடைந்துள்ளது.
கனடாவில் மிகவும் வேகமாக வாடகைத் தொகை அதிகரிப்பு பதிவான மாகாணமாக அல்பேர்ட்டா மாகாணம் கருதப்படுகின்றது.