Paristamil Navigation Paristamil advert login

கட்டுநாயக்க விமான நிலையத்தில் புதிய வசதி

கட்டுநாயக்க விமான நிலையத்தில் புதிய வசதி

12 பங்குனி 2024 செவ்வாய் 14:17 | பார்வைகள் : 5830


கட்டுநாயக்க விமான நிலையத்தில் புதிய பயணிகள் முனையம் அமைக்கப்படும் என துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

புதிய பயணிகள் முனையத்தில் 30 புதிய புறப்பாடு வழிகள் நிறுவப்படும் என அதன் செயலாளர் ருவன்சந்திர குறிப்பிட்டார்.

தற்போதுள்ள பயணிகள் முனையத்தில் போதிய இடவசதி இல்லாததால், புதிய பயணிகள் முனையத்தை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக செயலாளர் தெரிவித்தார்.

இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் கட்டுமானப் பணிகள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக உள்ளூர் கட்டுமான நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக செயலாளர் தெரிவித்தார்.

இந்த கட்டுமான செலவுக்காக 2.5 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்