Paristamil Navigation Paristamil advert login

பிரித்தானியாவில் புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு ஏற்படும் அவலம்! வெளியாகிய தகவல்

பிரித்தானியாவில் புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு ஏற்படும் அவலம்! வெளியாகிய தகவல்

12 பங்குனி 2024 செவ்வாய் 15:50 | பார்வைகள் : 4152


பிரித்தானியாவில் வாழும் புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் உணவு தரமில்லாததாகவும், மோசமானதாகவும் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆய்வமைப்புகள் சில, 2023 அக்டோபர் முதல், 2024 ஜனவரி வரை மேற்கொண்ட ஆய்வில் அதிர்ச்சியளிக்கும் சில தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறிப்பாக லண்டனில் தங்கியிருக்கும் புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் உணவு ஏற்கனவே கெட்டுப்போய், பூச்சிகளைக் கவரும் வகையில் உள்ளதாகவும், சாப்பாட்டில் முடி, பூஞ்சை மற்றும் பூச்சிகள் இருப்பதாகவும், சில நேரங்களில் சிக்கன் மற்றும் பிற மாமிச உணவுகள் சரியாக வேகாமல், அல்லது பச்சையாகவே உள்ளதாகவும், அதனால், புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் உணவில் பெரும்பகுதி குப்பைத்தொட்டிகளை சென்றடைவதாகவும் தெரியவந்துள்ளது.

சில நேரங்களில் பிள்ளைகள் உணவில்லாமல் அழுதுகொண்டிருப்பது, சரியான சத்தான உணவு கிடைக்காததால் உடல் வளர்ச்சி பாதிக்கப்படுவது, உடல் எடை இழப்பு, Food poisoning பிரச்சினையால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நிலை, பெரியவர்களுக்கு நீரிழிவு, என மோசமான உணவாலும், சரியான மற்றும் தரமான உணவு கிடைக்காததாலும் பலர் பாதிக்கப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.

இஸ்லாமியத் தாய்கள் சிலர், பகல் நேர நோன்புக்குப் பின் மாலையில் இஃப்தார் உணவுக்காக சென்றால், நீ உண்மையாகவே நோன்பு இருந்தாயா, உன் பிள்ளை மேல் சத்தியமாகக் கூறு என அவர்களிடம் கேட்கப்பட்டதும் தெரியவந்துள்ளது.

மொத்தத்தில் கூறினால், புகலிடக்கோரிக்கையாளர்களை, ஏன்தான் இந்த நாட்டில் புகலிடம் கோரினோமோ என எண்ணி வருத்தமடையச் செய்யும் அளவுக்கு, அவர்களுக்கு உணவு வழங்கும்போது அவர்களை அவமதிக்கும் மற்றும் மனிதத்தன்மையற்ற வகையில் நடத்தும் ஒருகொடூரமான நிலைமை நிலவுவதை உணர்ந்துகொள்ள முடிவதாக ஆய்வமைப்புகள் தெரிவிக்கின்றன.

அரசோ வழக்கம்போல, எல்லாம் நன்றாகத்தான் நடக்கின்றது என்று கூறிக்கொண்டிருக்க, புகலிடகோரிக்கையாளர்களுக்கு உணவு வழங்குவதற்காக பிரித்தானிய உள்துறை அலுவலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஒப்பந்ததார்களோ, கொழுத்த லாபம் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்