அவதானம் : ஒலிம்பிக் போட்டிகளின் போது 7,000 சுங்கவரி அதிகாரிகள் கடமையில்..
12 பங்குனி 2024 செவ்வாய் 18:34 | பார்வைகள் : 6921
ஒலிம்பிக் போட்டிகள் இடம்பெறும் போது நாடு முழுவதும் 7,000 சுங்கவரித்துறையினர் கண்காணிப்பு கடமையில் ஈடுபடுவார்கள் எனவும், போலி பொருட்கள் விற்பனையில் ஈடுபடுவோரைக் கைது செய்வார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த பெப்ரவரி மாதத்தில் பரிசில் 600 வரையான விளையாட்டு உபகரணங்கள் சுங்கவரித்துறையினரால் கைப்பற்றப்பட்டிருந்தது. ‘பரிஸ் ஒலிம்பிக் 2024’ என குறிப்பிடப்பட்ட பல பொருட்கள் (விற்பனைக்கு அனுமதியற்ற சட்டவிரோத பொருட்கள்) பறிமுதல் செய்யப்பட்டிருந்தன. பலர் கைதும் செய்யப்பட்டிருந்தார்.
பரிசில் ஏதேனும் விசேட நிகழ்வுகளின் போது, இந்த வீதி விற்பன்னர்களின் எண்ணிக்கையும் அதிகரிப்பது வழக்கம். அனுமதிக்கப்படாத தரமற்ற பொருட்களை விற்பனை செய்வது நீண்டகால தலையிடியாக இருந்து வந்த நிலையில், இம்முறை மிக தீவிரமாக கண்காணிப்பில் ஈடுபடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.