பிரான்ஸ் உக்ரேன் - இரு தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தம்! - பாராளுமன்றத்தில் ஆதரவு வாக்குகளுடன் நிறைவேற்றம்!!
13 பங்குனி 2024 புதன் 06:00 | பார்வைகள் : 4643
பரிஸ்-கீவ் (உக்ரேன் தலைநகரம்) பாதுகாப்பு ஒப்பந்தம் தொடர்பான விவாதங்களும், வாக்கெடுப்பும் நேற்று மார்ச் 12 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் இடம்பெற்றிருந்தது.
நண்பகலுக்கு பின்னர் ஒன்றுகூடிய சபையில் மிக நீண்ட நேரம் விவாதம் இடம்பெற்றிருந்தது. அதில் உக்ரேனின் பாதுகாப்பினை உறுதிப்படுத்த வேண்டிய அனைத்து நடவடிக்கைகளுக்கும் பிரான்ஸ் உதவியாக இருக்கும் என தெரிவிக்கப்படும் இந்த ஒப்பந்தம் குறித்து விவாதிக்கப்பட்டது.
அதையடுத்து, நேற்று இரவு 8.30 மணி அளவில் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. அதில் இந்த ஒப்பந்தத்துக்கு ஆதரவாக 372 வாக்குகளும், எதிராக 99 வாக்குகளும் பதிவாகின. (101 அமைச்சர்கள் சமூகமளிக்கவில்லை)
இந்த பெரும்பான்மை ஆதரவு வாக்குகளை அடுத்து, மேற்படி ஒப்பந்தம் நிறைவேற்ற அனுமதி கிடைத்துள்ளது.