Paristamil Navigation Paristamil advert login

பிரேசிலில்  டெங்கு காய்ச்சல் தீவிரம்.... 391 பேர் பலி

பிரேசிலில்  டெங்கு காய்ச்சல் தீவிரம்.... 391 பேர் பலி

13 பங்குனி 2024 புதன் 07:55 | பார்வைகள் : 3059


தென் அமெரிக்க நாடான பிரேசிலில் டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரித்து உள்ளதாக கூறப்படும் நிலையில், 391 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

டெங்கு காய்ச்சல் பரவலை கட்டுப்படுத்த பிரேசில் சுகாதாரத்துறையினர் கடுமையாக போராடி வந்தாலும் டெங்கு காய்ச்சல் பரவலின் வேகம் குறைந்தபாடில்லை.

இந்தநிலையில் நாட்டில் டெங்கு காய்ச்சலுக்கான பரிசோதனைகளை பொதுமக்கள் அதிக அளவில் மேற்கொள்ள அரசு வலியுறுத்தி வருகிறது.

அதன்படி இந்த ஆண்டு இதுவரை 15 லட்சத்து 83 ஆயிரம் பேர் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அடைந்ததாகவும், அதில் 12 ஆயிரத்து 652 பேர் வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தனர் எனவும் பிரெசில் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

அதேவேளை டெங்கு காய்ச்சல் பாதிப்புக்குள்ளாகி 2024 ஆண்டு இதுவரை 391 பேர் உயிரிழந்து உள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்