Paristamil Navigation Paristamil advert login

பரிஸ் 18 ஆம் வட்டாரத்தில் கத்திக்குத்து! - இளைஞன் பலி!

பரிஸ் 18 ஆம் வட்டாரத்தில் கத்திக்குத்து! - இளைஞன் பலி!

13 பங்குனி 2024 புதன் 08:30 | பார்வைகள் : 10459


பரிஸ் 18 ஆம் வட்டாரத்தில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் இளைஞன் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

நேற்று மார்ச் 12 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை 6 மணி அளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. போர்து லா சப்பல் அருகே (porte de la Chapelle வைத்து இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. 

2005 ஆம் ஆண்டு செப்டம்பரில் பிறந்த இளைஞன் ஒருவரே கொல்லப்பட்டுள்ளார். அவர் மீது தாக்குதல் மேற்கொண்டவர் 2006 ஆம் ஆண்டு பிறந்த மற்றொரு இளைஞன் எனவும், அவர் கைது செய்யப்பட்டதாகவும் அறிய முடிகிறது.

தாக்குதலுக்குரிய நோக்கம் குறித்த விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். 

பரிஸ் 2 ஆம் வட்டார காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்