Paristamil Navigation Paristamil advert login

ரொறன்ரோவில் பயங்கர துப்பாக்கிச் சூடு! 2 பேர் பலி

ரொறன்ரோவில் பயங்கர துப்பாக்கிச் சூடு! 2 பேர் பலி

13 பங்குனி 2024 புதன் 08:40 | பார்வைகள் : 6959


கனடாவின் ரொறன்ரோவில் உறவினர்கள் மூன்று பேர் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் மற்றுமொருவா காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரொறன்ரோவின் ரீஜன்ட் பார்க்கின் டுன்டாஸ் வீதியில் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் மற்றையவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.

நபர் ஒருவர் தனது மூன்று உறவினர்கள் மீது இவ்வாறு துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவத்தில் காயமடைந்த பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தச் சென்ற இரண்டு பொலிஸ் அதிகாரிகளும் சம்பவத்தில் காயமடைந்துள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்ட நபரை பொலிஸார் கைது செய்துள்ளதுடன் ஆயுதத்தையும் கைப்பற்றியுள்ளனர்.


இதேவேளை, ரீஜன்ட் பார்க் பகுதியில் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே துப்பாக்கிச் சூட்டு வன்முறைகள் எதுவும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

வர்த்தக‌ விளம்பரங்கள்