ஜப்பானியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

13 பங்குனி 2024 புதன் 09:13 | பார்வைகள் : 9517
ஜப்பானின் மேற்குப் பகுதியில் உள்ள ஃபுகுயாமா நகரத்தில், அதிக நச்சுத்தன்மையுள்ள இரசாயனங்கள் அடங்கிய தொட்டியில் பூனை விழுந்ததால், மக்கள் தங்கள் செல்லப்பிராணிகளை விட்டு விலகி இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த பூனை அங்கிருந்து தப்பிச் சென்றது சிசிடிவி காட்சிகளில் இருந்து தெரியவந்துள்ளது.
ஹெக்ஸாவலன்ட் குரோமியம் (hexavalent chromium) என்ற இராசாயனப்பொருள் அடங்கிய தொட்டிக்குள் பூனை விழுந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
புற்றுநோய் உள்ளிட்ட ரசாயனங்களின் பாதிப்புகள் ஏற்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
புகுயாமா நகர மக்கள் பூனைகள் உள்ளிட்ட செல்லப்பிராணிகளிடம் இருந்து விலகி இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அதேநேரம், பூனையை மீட்கும் முயற்சியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
குறித்த பூனை இறந்திருக்கலாம் என சிலர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1