Paristamil Navigation Paristamil advert login

பிரதமர் மோடி ஓட்டு கேட்டு மட்டும் தமிழ்நாட்டிற்கு வரலாமா? - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி

பிரதமர் மோடி ஓட்டு கேட்டு மட்டும் தமிழ்நாட்டிற்கு வரலாமா? - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி

14 பங்குனி 2024 வியாழன் 13:17 | பார்வைகள் : 2677


பல்வேறு துறைகளின் சார்பில் ரூ.4.181 கோடி மிதிப்பீட்டில் வடசென்னை வளர்ச்சித் திட்ட விரிவாக்கப் பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 

அதன்பின்னர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

சென்னை மாநகரை இந்தியாவின் தலைசிறந்த மாநகரமாக மாற்ற வேண்டிய பொறுப்பை அமைச்சர்களிடம் கொடுத்துள்ளேன். என்னை எம்.எல்.ஏ.வாகவும், மேயராகவும், துணை முதல்-அமைச்சராகவும், இப்போது முதல்-அமைச்சராகவும் ஆக்கியது வட சென்னைதான்.

சென்னைக்கு நாள்தோறும் புதிய புதிய திட்டங்களை தி.மு.க. அரசு செயல்படுத்தி வருகிறது. அடுத்த 3 ஆண்டுகளில் 200 திட்டங்கள் நிறைவேற்றப்பட உள்ளன. மக்கள் அதிகம் கூடும் இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன. கழிவுநீர், திடக் கழிவு கட்டமைப்புகள் போன்ற உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன.

சென்னையின் வளர்ச்சித் திட்டங்களை நானே தொடர்ந்து கண்காணிப்பேன். 500 ஆண்டுகள் பழமையான சென்னையை நவீனமயமாக்குவதில் தி.மு.க.வுக்கு முக்கிய பங்கு உள்ளது. சென்னையின் அனைத்து வளர்ச்சிப் பணிகளும் தி.மு.க. உருவாக்கியவைதான். தி.மு.க.வை உருவாக்கிய வடசென்னை பகுதியை முக்கியமாக நினைக்கிறது தி.மு.க. அரசு. பாரிமுனை பேருந்து நிலையம் ரூ.832 கோடி மதிப்பில் நவீனமயாக்கப்படும்.

தமிழ்நாட்டுக்கு நிதியை கேட்டால் பிரிவினைவாதி என்பதா? நாங்கள் பிரிவினை பேசவில்லை. ஒரு கண்ணில் வெண்ணெயும், மற்றொரு கண்ணில் சுண்ணாம்பும் ஏன் என்றுதான் கேட்கிறேன். தேசபக்தி பற்றி தி.மு.க.வுக்கு பாடம் எடுக்கத் தேவையில்லை. தமிழ்நாட்டுக்கு பிரதமர் மோடி ஒன்றும் செய்யவில்லை. சென்னை வெள்ள பாதிப்புகளை பிரதமர் மோடி வந்து பார்க்கவில்லை. வெள்ளத்தின்போது மக்களை பார்க்க வராதவர், ஓட்டு கேட்க மட்டும் தமிழ்நாட்டிற்கு வரலாமா?. சென்னைக்காக மத்திய அரசு எந்த திட்டத்தையும் செய்யவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்