Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் அமெரிக்க டொலரின் பெறுமதியில் மாற்றம்!

இலங்கையில் அமெரிக்க டொலரின் பெறுமதியில் மாற்றம்!

14 பங்குனி 2024 வியாழன் 14:13 | பார்வைகள் : 3113


நேற்றைய நாளுடன் ஒப்பிடுகையில், இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை மற்றும் கொள்முதல் பெறுமதி சற்று வீழ்ச்சியை பதிவுசெய்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி இன்று (14) வெளியிட்டுள்ள நாணயமாற்று விகித அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 301 ரூபாய் 01 சதமாக பதிவாகியுள்ளது.

நேற்றைய தினம், அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 301 ரூபாய் 76 சதமாக காணப்பட்டது.

அத்துடன், இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 310 ரூபாய் 64 சதமாக பதிவாகியுள்ளது.

நேற்றைய தினம், அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 311 ரூபாய் 00 சதமாக காணப்பட்டது.
 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்