Paristamil Navigation Paristamil advert login

பரிசில் விதிவிலக்காக பதிவான மிதமான வெப்பம்!

பரிசில் விதிவிலக்காக பதிவான மிதமான வெப்பம்!

15 பங்குனி 2024 வெள்ளி 07:58 | பார்வைகள் : 4869


நேற்று மார்ச் 14 ஆம் திகதி பரிசில் விதிவிலக்காக மிதமான வெப்பம் பதிவானது. 

நேற்று நண்பகலின் பின்னர் பரிசில் 18.7°C வெப்பம் பதிவானதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த பருவகாலத்தில் பதிவாகும் சராசரி வெப்பத்தை விட 6°C அதிகமாகும். 

அடுத்த வாரத்தில் தலைநகரில் இதே போன்ற மிதமான வெப்பம் (18°C ​​தொடக்கம் 20°C வரை) நிலவும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று வெள்ளிக்கிழமை மற்றும் வார இறுதி நாட்களில் 16°C இற்கும் குறைவான வெப்பம் நிலவும் எனவும், நேற்றைய நாள் விதிவிலக்காக இந்த வெப்பம் பதிவாகியிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்