Paristamil Navigation Paristamil advert login

புற்றுநோயை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிவது எப்படி?

புற்றுநோயை  ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிவது எப்படி?

15 பங்குனி 2024 வெள்ளி 12:58 | பார்வைகள் : 6621


உலக அளவில் ஏற்படும் இறப்புகளுக்கான காரணங்களின் முக்கிய இடத்தை கொண்டிருப்பது புற்றுநோய் என்று தரவுகள் சொல்லப்படுகிறது.

2020 ஆம் ஆண்டில் 10 மில்லியனுக்கும் அதிகமான நபர்கள் புற்றுநோய் காரணமாக இறந்துள்ளனர். அதிலும் பெரும்பாலும் மார்பக புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய், பெருங்குடல் புற்றுநோய் மற்றும் விந்துப்பை புற்று நோய் ஆகிய புற்றுநோய் அதிக அளவில் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளன.

புற்றுநோய் சிகிச்சையில் முதல் கட்டமாக செய்ய வேண்டியது நோய் கண்டறிதல் ஆகும். புற்றுநோய் செல்கள் இருப்பது தாமதமாக கண்டுபிடிக்கப்பட்டால் அதற்கான சிகிச்சையில் தாமதம் ஏற்படுகிறது. இதுவே தீவிர விளைவுகளையும் ஏற்படுகிறது.

இதன் காரணமாக சிகிச்சைக்கு அப்பாற்பட்ட வளர்ச்சியை புற்றுநோய் செல்கள் அடைந்து விடுகின்றன. ஆகவே புற்றுநோயை ஆரம்ப கட்டத்திலேயே கண்டுபிடிப்பது மிக மிக முக்கியமான ஒன்றாகும். ஆகவே பெண்கள் மற்றும் ஆண்களில் பெரும்பாலும் அலட்சியமாக கருதப்படும் ஒரு சில புற்றுநோய் அறிகுறிகளை விளக்கமாக இந்த கட்டுரையில் தெரிந்து கொள்வோம்:

காய்ச்சல், இருமல், சளி போன்ற சாதாரணமான நோய்கள் கூட சோர்வு ஏற்படுவதுண்டு. ஆனால் சோர்வு என்பது புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள பெரும்பாலான நபர்களால் அனுபவிக்கப்படும் ஒரு அறிகுறி ஆகும். புற்றுநோயானது ஒரு நபரை மிகவும் சோர்வடைய செய்து நம் உடலில் உள்ள ஆற்றலை உறிஞ்சி விடுகிறது.

இந்த சோர்வானது நாளுக்கு நாள் அதிகரிக்க தொடங்கும். இதனால் ஒரு நபர் படுக்கையில் இருந்து எழுவதற்கு கூட சிரமம் ஏற்படலாம். சாப்பிடுவதற்கு, சிறிது தூரம் நடப்பதற்கு கூட கடினமாக இருக்கக்கூடும். ஓய்வு ஓரளவுக்கு உதவி புரிந்தாலும், இந்த சோர்வை முழுவதுமாக போக்குவது கடினம். புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த சோர்வானது வலி, குமட்டல், வாந்தி அல்லது மனச்சோர்வு போன்றவற்றையும் கூட ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது.


தற்போது பெரும்பாலான மக்கள் உடல் எடையை குறைக்க பல உடற்பயிற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் உடலில் நோயின் தாக்கம் அதிகமாக இருந்தால் உடல் எடை குறைவது புற்றுநோய்க்கான முதல் அறிகுறி ஆகும். ஆனால் துரதிஷ்டவசமாக பலர் இதனை பெரிதும் கவனிப்பதில்லை. எந்த ஒரு காரணமும் இல்லாமல் திடீரென உங்கள் உடல் எடை குறையும் பொழுது, கட்டாயமாக ஒரு மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

லூகேமியா என்ற ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள நபர்களுக்கு சருமம் சார்ந்த பல பிரச்சனைகள் ஏற்படும். அதில் உடல் முழுவதும் தடிப்புகள் காணப்படும். சருமத்திற்கு தோளுக்கு அடியில் இருக்கக்கூடிய சிறு சிறு ரத்த நாளங்கள் உடைவதால் இந்த தடிப்புகள் உண்டாகிறது. ரத்த செல்களின் அமைப்பில் சமநிலை இல்லாத காரணத்தால் சருமத்தில் ஏராளமான மாற்றங்கள் தோன்ற துவங்கும். ஆகவே சருமத்தில் ஏற்படும் மாற்றங்களை கவனிக்காமல் விடுவதும் தவறு.

கண்களை கடுமையான வலி தோன்றுவது, கண்களில் புற்றுநோய் செல்கள் வளர்வதற்கான முக்கியமான ஒரு ஆரம்ப அறிகுறி. தற்போது காலகட்டத்தில் அனைவரும் அதிக அளவில் அலைபேசிகளை பயன்படுத்துவதால் கண்வலியும் சர்வ சாதாரணமாக ஆகிவிட்டது. இந்த அறிகுறிகளை பெரும்பாலான நபர்கள் கண்டுகொள்ளாமல் விட்டு விடுகின்றனர். கண் வலி அதிகமாக ஏற்படும் போது நிச்சயம் மருத்துவரை பரிசோதிக்க வேண்டியது அவசியம்.

ஒரு நாளில் ஒரு முறையாவது தலைவலி வந்துவிடும் என்று தான் நம்மில் பலரும் இருந்து வருகின்றோம். ஆரம்பத்தில் லேசாக இருந்த தலைவலி படிப்படியாக அதிகரிக்க தொடங்கும். என் அது புற்றுநோய் காண ஒ ச்ரு அறிகுறியாக கூட இருக்கலாம். ஆகவே அதிகப்படியான தலைவலியை அனுபவிக்கும் நபர்கள் ஆரம்பத்திலேயே மருத்துவரை அணுகுவது அவசியம். ஏனெனில் இது பிரைன் ட்யூமரின் ஆரம்ப அறிகுறியாகும்.

வழக்கமாகவே மாதவிடாய் என்பது பெரும்பாலான பெண்கள் அதிகப்படியான வலியையும் ரத்த போக்கையும் எதிர்கொள்வார்கள். ஆனால் வழக்கத்திற்கு மாறாக அதிகப்படியான ரத்த ஓட்டத்துடன் கூடிய, உங்களால் தாங்கிக் கொள்ள முடியாத வலியை அனுபவித்தீர்களானால் கட்டாயமாக ஒரு மருத்துவ பரிசோதனை செய்து பார்ப்பது நல்லது. ஏனெனில் இது எண்டோமெட்ரியல் கேன்சருக்கான ஒரு அறிகுறியாக பார்க்கப்படுகிறது.

ஆண்களைக் காட்டிலும் பெண்களில் மார்பக புற்று நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. மார்பக புற்றுநோய் வளர்ச்சியை ஆரம்பத்திலேயே கண்டறிவதற்கு அவ்வப்போது பெண்கள் தங்களது மார்பகத்தை சுய பரிசோதனை செய்து பார்க்க வேண்டும். முலைக்காம்பு அல்லது மார்பகத்தில் ஏதேனும் மாற்றங்கள் தோன்றுமாயின் உடனடியாக அதனை மருத்துவரிடம் தெரிவித்து தகுந்த சிகிச்சை பெறுவது அவசியம். காம்புகள் வடிவத்தில் மாற்றம், உள்நோக்கி அல்லது பக்கவாட்டில் திரும்பியவாறு காணப்படுதல் போன்றவை மார்பக புற்றுநோய் காண ஒரு சில அறிகுறிகள் ஆகும்.

மேலே கூறப்பட்டுள்ள அறிகுறிகளைத் தவிர புற்றுநோய்க்கான வேறு சில அறிகுறிகள்: பிறப்புறுப்பில் வீக்கம், சாப்பிடுவதற்கு மற்றும் உணவை விழுங்குவதில் சிரமம், செரிமான பிரச்சனைகள், சுவாசிக்க சிரமப்படுதல், வயிற்று உப்புசம், மலம் கழிப்பதில் மாற்றங்கள், சிறுநீர் கழிக்கும் போது வலி, காய்ச்சல் மற்றும் நகங்களில் மாற்றங்கள் போன்ற நம் வாழ்வில் எதிர்கொள்ளும் சிறு சிறு பிரச்சனைகள் கூட பெரிய விளைவினையும் ஏற்படுத்தக்கூடும்.

5 நாள்கள் முன்னர்

நினைவஞ்சலி

RAJADURAI

FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI

வயது : 44

இறப்பு : 14 Aug 2025

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்