ஊதியத்துடன் கூடிய விடுமுறை! - மாற்றங்கள் வருகிறது!

16 பங்குனி 2024 சனி 15:57 | பார்வைகள் : 11785
ஊதியத்துடன் வழங்கப்படும் விடுமுறைகளில் பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்பட உள்ளது. வருடத்துக்கு ஐந்து வாரங்கள் வழங்கப்பட்ட விடுமுறை விரைவில் நான்கு வாரங்களாக குறைக்கப்பட உள்ளது.
****
பணி இடங்களில் உங்கள் தொழிசாராத நோய் (maladie non professionnelle) உள்ளவர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்துடன் கூடிய விடுமுறையே மட்டுப்படுத்தப்பட உள்ளது. உங்களது தொழில் முறைக்கு தொடர்பில்லாத வெளி நோய்கள் ஏற்பட்டுள்ளவர்களுக்கு ஊதியத்துடன் கூடிய ஐந்துவார விடுமுறை இதுவரை வழங்கப்பட்டிருந்தது. மிக விரைவில் இந்த ஐந்துவார விடுமுறை நான்குவாரமாக குறைக்கப்பட உள்ளது. இதற்கான வாக்கெடுப்பு ஒன்று வரும் திங்கட்கிழமை பாராளுமன்றத்தில் மேற்கொள்ளப்பட உள்ளது.
ஐரோப்பிய விதிமுறைகளுக்கு ஏற்றது போல் நான்குவாரங்களாக குறைக்கப்பட உள்ளது.
****
அதேவேளை, தொழிசார்ந்த நோய் (maladie professionnelle,) உள்ளவர்கள் தற்போது உள்ளது போல் வருடத்துக்கு ஐந்து வாரங்கள் ஊதியத்துடன் கூடிய விடுமுறையை பெற முடியும்.