Paristamil Navigation Paristamil advert login

Aubervilliers : பேருந்து மோதி சிறுமி பலி!

Aubervilliers : பேருந்து மோதி சிறுமி பலி!

16 பங்குனி 2024 சனி 17:00 | பார்வைகள் : 8404


பத்து வயதுடைய சிறுமி ஒருவர் பேருந்துடன் மோதியதில் கொல்லப்பட்டுள்ளார். Aubervilliers (Seine-Saint-Denis) நகரில் இச்சம்பவம் இன்று சனிக்கிழமை காலை இடம்பெற்றுள்ளது.

காலை 9.30 மணி அளவில் இவ்விபத்து Avenue Jean Jaurès வீதியில் உள்ள பாதசாரிகள் கடவையில் இடம்பெற்றுள்ளது. 10 வயதுச் சிறுமி ஒருவர் பாதசாரி கடவையை  கடக்க முற்பட்ட வேளையில், சுற்றுலாப்பயணிகளை ஏற்றிச்சென்ற பேருந்துடன் மோதுண்டுள்ளார்.

பாதசாரிகளுக்கான சமிக்ஞை விளக்கு ஒளிரும்போதே அவர் கடவையில் சென்றதாகவும், பேருந்து சாரதி சிறுமியை கவனிக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்து தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த விபத்து அப்பகுதியில் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்