கனடா செல்ல முயன்ற யாழ் இளைஞன் கைது
17 பங்குனி 2024 ஞாயிறு 06:14 | பார்வைகள் : 7454
போலி கனேடிய கடவுச்சீட்டில் கனடாவிற்கு தப்பிச் செல்ல முயன்ற இலங்கையர் ஒருவரை கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு மற்றும் குடியகல்வு எல்லை அமலாக்கப் பிரிவினர் நேற்று (16) காலை கைது செய்துள்ளனர்.
24 வயதான அந்த நபர் யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதியைச் சேர்ந்தவர் எனவும் அவர் கத்தாரின் தோஹா நோக்கிச் செல்வதற்காக விமான நிலையத்திற்கு வந்துள்ளதாகவும் குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
விமான அனுமதியின் போது அவர் வழங்கிய கனேடிய கடவுச்சீட்டில் சந்தேகம் எழுந்ததால், அவர் விமான நிலையத்தின் குடிவரவு மற்றும் குடியகல்வு எல்லைக் கட்டுப்பாட்டுப் பிரிவிற்கு மேலதிக விசாரணைக்காக அழைக்கப்பட்டார். அங்கு அவரது கடவுச்சீட்டு போலியானது என கண்டுபிடிக்கப்பட்டது.
குறித்த நபரின் உண்மையான இலங்கை கடவுச்சீட்டும் அவரிடம் காணப்பட்டதாகவும், அதுமட்டுமல்லாமல் மாலைதீவுக்கு செல்வதற்கான போலியான Gulf Airlines விமான டிக்கெட்டையும் கண்டெடுத்ததாகவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan