கனடாவில் மர்மான முறையில் உயிரிழந்த இந்திய குடும்பம்

17 பங்குனி 2024 ஞாயிறு 06:19 | பார்வைகள் : 7685
கனடாவின் ஒட்டாவா மாகாணத்தில் பிக் ஸ்கை வே பகுதியில் உள்ள வீடு ஒன்றில் கடந்த வாரம் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
அந்த வீட்டில் சோதனை செய்ததில் கருகிய நிலையில் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் எத்தனை பேரின் சடலங்கள் என்பது உறுதி செய்யப்படவில்லை.
இந்நிலையில் தீ விபத்தில் இறந்தது இந்திய வம்சாவளியை சேர்ந்த தம்பதியினர் மற்றும் அவர்களது 16வயது மகள் என்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டது.
ராஜீவ் வாரிகூ, அவரது மனைவி ஷில்பா கோதா, மகள் மாஹேக் வாரிகூ என்பது அடையாளம் கண்டறியப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ராஜீவ் ஆன்டாரியோ சுகாதார துறை அமைச்சகத்தில் பணியாற்றி வந்துள்ளார்.
இதனிடையே சந்தேகத்திற்கிடமான முறையில் ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று பேரும் உயிரிழந்துள்ளதாக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
2 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1