Paristamil Navigation Paristamil advert login

அமரன் திரைப்படம் விநாயகர் சதுர்த்தியில் வெளியாகிறதா?

 அமரன் திரைப்படம் விநாயகர் சதுர்த்தியில் வெளியாகிறதா?

17 பங்குனி 2024 ஞாயிறு 12:41 | பார்வைகள் : 1946


சிவகார்த்திகேயன் தற்போது இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் 'அமரன்' என்கிற படத்தில் நடித்துள்ளார். இந்திய ராணுவ வீரர் முகுந்தன் வாழ்க்கை வரலாற்று படமாக இப்படம் உருவாகியுள்ளது. இதில் கதாநாயகியாக சாய் பல்லவி நடித்துள்ளார். ராஜ்கமல் நிறுவனம், சோனி பிக்சர்ஸ் என இரு நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

தற்போது இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இப்படம் ஆகஸ்ட் மாதம் வெளியாக வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டு வந்ததை தொடர்ந்து இப்போது இதன் படப்பிடிப்பில் ஏற்பட்ட தாமதத்தால் ஆகஸ்ட் மாதத்தில் இருந்து செப்டம்பரில் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகவுள்ளதாக படக்குழு வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்