Paristamil Navigation Paristamil advert login

''தி கோட்'' படத்தில் வில்லன் இவரா?

''தி கோட்'' படத்தில் வில்லன் இவரா?

17 பங்குனி 2024 ஞாயிறு 13:16 | பார்வைகள் : 6030


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய். இவர், நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் உருவாகி வரும் படம்  தி கோட். இப்பட ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
 
இந்த நிலையில், அடுத்தகட்ட ஷூட்டிங், கேரளாவில் உள்ள பிரபல கிரீன் ஃபீல்ட் இன்டர்நேசனல் ஸ்டேடியத்தில் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகிறது.
 தி கோட் படத்தில்  80-களின் வெள்ளிவிழா நாயகன் மோகன்தான் வில்லன் என்று கூறப்படும் நிலையில், அவர் இன்னும் கேரளாவுக்குச் செல்லவில்லை என தகவல் வெளியாகிறது.
 
இலங்கைக்குச் செல்வதற்குப் பதிகாக தி கோட் படக்குழு கேரளாவுக்குச் சென்று கிளைமேக்ஸ் காட்சிகளை ஷூட்டிங் எடுத்து வரும் நிலையில், வரும் வியாழக்கிழமை விஜய் அங்கு செல்கிறார். அப்போது அவருக்கும் நடிகர் பிரசாந்திற்குமான காட்சிகள் எடுக்கப்படுகிறதாம். ஆனால் வில்லனாக நடிக்கும் மோகன் இன்னும் அங்கு செல்லாத  நிலையில் கடைசி நாளில் அவர் செல்லலாம் என கூறப்படுகிறது.

திருவனந்தபுரத்திற்கு விஜய் கடைசியாக காவலன் பட ஷூட்டிங்போது சென்ற நிலையில்,  பல ஆண்டுகளுக்கு பிறகு 'தி கோட்' படத்தின் ஷுட்டிங்கிற்கு சென்றுள்ளார். விஜய்க்கு   கேரளாவில் ரசிகர்கள் அதிகம் என்பதால், அவரை காண ரசிகர்களும் ஆர்வலுடன் காத்திருக்கின்றனர்.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்