Paristamil Navigation Paristamil advert login

84 வயதில் கவுண்டமணி செய்த சாதனை..!

84 வயதில் கவுண்டமணி செய்த சாதனை..!

17 பங்குனி 2024 ஞாயிறு 14:16 | பார்வைகள் : 2799


பிரபல நகைச்சுவை நடிகர் கவுண்டமணி நடித்து வரும் ’ஒத்த ஓட்டு முத்தையா’ என்ற படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்த நிலையில் தற்போது இந்த படத்திற்காக கவுண்டமணி தொடர்ச்சியாக 8 மணி நேரம் டப்பிங் பேசியதாக வெளிவந்திருக்கும் தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கவுண்டமணி மற்றும் யோகி பாபு இணைந்து நடித்த ’ஒத்த ஓட்டு முத்தையா’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்பதும் நீண்ட இடைவேளைக்கு பிறகு கவுண்டமணி ரீஎண்ட்ரி ஆகும் இந்த படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சாய் ராஜகோபால் இயக்கத்தில் சித்தார்த் விபின் இசையில் உருவாகி வரும் இந்த படம் சென்டிமென்ட், அரசியல், காமெடி என அனைத்தும் கலந்த ஒரு கலவை என்றும் இந்த படத்தின் கவுண்டமணி மூன்று சகோதரிகளின் அண்ணனாக நடித்திருக்கிறார் என்றும் மூன்று சகோதரிகளையும் மூன்று சகோதரர்களுக்கு தான் திருமணம் செய்து கொடுப்பேன் என்று பிடிவாதமாக இருப்பது தான் இந்த படத்தின் கதை என்றும் கூறப்படுகிறது.

கவுண்டமணியின் சகோதரிகளாக சைதன்யா, அபர்ணா மற்றும் பிந்து ஆகியோர் நடித்த இந்த படத்தில் நாகேஷ் பேரன் கஜேஷ், மயில்சாமி மகன் அன்பு மயில்சாமி, சிங்கமுத்து மகன் வாசன் கார்த்திக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்நிலையில் இந்த படத்திற்காக 8 மணி நேரம் தொடர்ச்சியாக கவுண்டமணி டப்பிங் பேசி சாதனை செய்துள்ளார். கவுண்டமணிக்கு தற்போது 84 வயதாகும் நிலையிலும் அவர் தொழில் மீது உள்ள பக்தி காரணமாக தொடர்ச்சியாக டப்பிங் பேசி சாதனை உள்ளதை பார்த்து அனைவரும் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்