Paristamil Navigation Paristamil advert login

சூர்யா ரசிகர்களுக்கு இந்த ஆண்டு டபுள் விருந்தா?

 சூர்யா ரசிகர்களுக்கு இந்த ஆண்டு  டபுள் விருந்தா?

17 பங்குனி 2024 ஞாயிறு 14:28 | பார்வைகள் : 1235


ஜிவி பிரகாஷ் அளித்த பேட்டியில் சூர்யாவின் 43 வது படம் இந்த ஆண்டு இறுதியில் வெளியாகும் என்று கூறியுள்ளதை அடுத்து ’கங்குவா’ மற்றும் ’சூர்யா 43’ ஆகிய இரண்டு திரைப்படங்கள் இந்த ஆண்டு வெளியாகயுள்ளதால் சூர்யா ரசிகர்களுக்கு டபுள் விருந்து கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவான ’கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாக இருக்கும் ’சூர்யா 43’ படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷுக்கு இது நூறாவது படம் என்ற நிலையில் அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் ’சூர்யா 43’ படம் இந்த ஆண்டு இறுதியில் வெளியாகும் என்று கூறியுள்ளார். எனவே தேர்தலுக்குப் பின் மே அல்லது ஜூன் மாதத்தில் ’கங்குவா’ படமும் இந்த ஆண்டு இறுதியில் அதாவது நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்தில் ’சூர்யா 43’ படமும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுவதை அடுத்து சூர்யா ரசிகர்களுக்கு ஒரே கொண்டாட்டமாக உள்ளது.

மேலும் சூர்யா ’கர்ணா’ என்ற பாலிவுட் படத்தில் நடித்து வருகிறார் என்பதும் அந்த படத்தின் படப்பிடிப்பிலும் அவர் இடையிடையே கலந்து கொள்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்