Paristamil Navigation Paristamil advert login

26 கிலோ கஞ்சாவுடன் Montparnasse நிலையத்தில் ஒருவர் கைது!

26 கிலோ கஞ்சாவுடன் Montparnasse நிலையத்தில் ஒருவர் கைது!

17 பங்குனி 2024 ஞாயிறு 16:21 | பார்வைகள் : 14505


26 கிலோ கஞ்சாவுடன் பயணித்த ஒருவரை Montparnasse நிலையத்தில் வைத்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

நேற்று மார்ச் 16 ஆம் திகதி சனிக்கிழமை நண்பகலுக்கு சற்று முன்னதாக இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 37 வயதுடைய ஒருவர் தனது பயணப்பையில் 26 கிலோ கஞ்சா போதைப்பொருளை மறைத்து எடுத்துச் சென்றுள்ளார். அவரை சந்தேகத்தின் அடிப்படையில் சோதனையிட்ட காவல்துறையினர், அவரது பையில் இருந்து இதனை மீட்டுள்ளனர். அத்தோடு உணவுகளை பதப்படுத்த பயன்படுத்தப்படும் Foil தாளில் சில கஞ்சா செடி விதைகளையும் எடுத்துச் சென்றுள்ளார்.

குறித்த நபர் உடனடியாக கைது செய்யப்பட்டார். போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. கைதான நபர் கரீபிய நாடுகளில் ஒன்றான டொமினிக்கனைச் சேர்ந்தவர் என அறிய முடிகிறது.

தொடருந்து நிலையத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட காவல்துறையினர் குறித்த கைது சம்பவத்தை மேற்கொண்டதுடன், இது தொடர்பான மேலதிக வழக்கை பிரெஞ்சு போதைப்பொருள் தடுப்பு பிரிவு காவல்துறைக்கு மாற்றியுள்ளனர்.

வர்த்தக‌ விளம்பரங்கள்