Paristamil Navigation Paristamil advert login

பரிஸ் : மதுபானவிடுதியில் தாக்குதல்! - விசாரணைகள் ஆரம்பம்!

பரிஸ் : மதுபானவிடுதியில் தாக்குதல்! - விசாரணைகள் ஆரம்பம்!

17 பங்குனி 2024 ஞாயிறு 16:33 | பார்வைகள் : 8179


பரிஸ் 10 ஆம் வட்டாரத்தில் வாடிக்கையாளர் ஒருவர் மீது தாக்குதல் இடம்பெற்றுள்ளது. காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நேற்று மார்ச் 16 ஆம் திகதி சனிக்கிழமை இரவு 10 மணி அளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இங்குள்ள மதுபான விடுதியில் நபர் ஒருவர் தனது நண்பர்களுடன் மது அருந்திக்கொண்டிருந்த வேளையில், அவரை நெருங்கிய மற்றொரு வாடிக்கையாளர் அவர் மீது மதுபானத்தினை ஊற்றி அவரை அவமதிக்கும் வகையில் திட்டியுள்ளார்.

தாக்குதலுக்கு இலக்கானவர் ஓரினச்சேர்க்கையாளர் எனவும், அதன் காரணமாகவே இந்த தாக்குதல் இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்படி தாக்குதல் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையான காலப்பகுதியில் 419 தாக்குதல்கள் ஓரினச்சேர்க்கையாளர்கள் மீது இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

வர்த்தக‌ விளம்பரங்கள்